நடிகர்கள் விவேக், வடிவேலுடன் இணைந்து பல திரைப்படங்களில் நடித்துள்ள நகைச்சுவை நடிகர் மாரடைப்பால் மரணம்…

பிரபல நகைச்சுவை நடிகர் ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

கடந்த சில நாட்களாக, தமிழ் சினிமா பிரபலங்கள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றனர். நடிகர்கள் விவேக், பாண்டு, இயக்குனர் தாமிரா, நெல்லை சிவா, ஜோக்கர் துளசி, மாறன் மற்றும் இயக்குனர் கே.வி.ஆனந்த் என பிரபலமான பலர் சமீபத்தில் உயிரிழந்தனர்.

இந்நிலையில் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்துள்ள ஐயப்பன் கோபி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.

இவர் விவேக் மற்றும் வடிவேலுவுடன் இணைந்து பல படங்களில் நடித்துள்ளார். கனா கண்டேன்,ஆறு, காக்கி சட்டை, கருப்பன், சதுரங்க வேட்டை, என் ஆளோட செருப்பை காணோம் உட்பட ஏராளமான படங்களில் நடித்துள்ளார்.

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்துாரை சேர்ந்தவர் ஐயப்பன் கோபி. பாங்க் ஆப் மதுராவில் பணியாற்றிய இவர், நடிப்பு ஆசையால் அதை விட்டுவிட்டு சினிமாவுக்கு வந்தார்.

பாலசந்தர் ‘ஜாதிமல்லி’ படத்தில் இவரை அறிமுகப் படுத்தினார். தொடர்ந்து குணசித்திரம், நகைச்சுவை என சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஏப்ரல் 24 ஆம் திகதி இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதை அடுத்து மரணமடைந்தார். இந்த செய்தி இப்போது தான் தெரிய வந்திருக்கிறது.

ஐயப்பன் கோபி மறைவை அடுத்து திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.