அடுத்த கட்ட தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு முதல் கட்ட தடுப்பூசியை விரைவுப்படுத்த வேண்டும்- அங்கஜன்…

யாழ்ப்பாணத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள முதல் கட்ட தடுப்பூசியை விரைவாக மக்களுக்கு செலுத்தினால்தான் அடுத்த கட்ட தடுப்பூசியை விரைவாக பெற்றுக்கொள்ள முடியுமென நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அங்கஜன் இராமநாதன் மேலும் கூறியுள்ளதாவது, நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை காரணமாக யாழ்ப்பாணத்திலும் கொரோனா தொற்றுக்கு உள்ளாகின்றவர்களின் எண்ணிக்கை  குறைந்து வருகின்றது.

மேலும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு ஒட்சிசன் சிலிண்டர்கள் தேவையாக இருக்கின்றது.

அத்துடன் முதல் கட்டமாக தற்போது வழங்கப்பட்டுள்ள தடுப்பூசியினை மக்களுக்கு வழங்குவதற்கு விரைவுப்படுத்தினால்,  இரண்டாம் கட்ட தடுப்பூசினை யாழ்ப்பாணத்திற்கு வழங்க முடியுமென அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஆகவே முதல்கட்ட தடுப்பூசியை மக்களுக்கு வழங்குவதற்கு விரைவுப்படுத்தினால், மிகவும் விரைவாக அடுத்த கட்ட தடுப்பூசிகளை எம்மால் பெற்றுக்கொள்ள முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.