மக்களின் நடமாட்டத்தை கட்டுப்படுத்த வவுனியாவில் சோதனை சாவடிகளை அமைத்துள்ள இராணுவம்…

வவுனியா நகர் பகுதிகளில் மக்களின் நடமாட்டம் அதிகரித்துள்ளமையினால், அதனை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவதற்கு, வவுனியா நகரின் பிரதான வீதிகளில், புதிய சோதனை சாவடிகளை இராணுவத்தினர் அமைத்துள்ளனர்.

மேலும் வவுனியா நகரிற்கு செல்லும் பிரதான நான்கு வீதிகளிலும் கண்காணிப்பு நடவடிக்கையில், இன்று (திங்கட்கிழமை) காலை முதல் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது.

அத்துடன் வவுனியா ஹொரவப்பொத்தனை வீதி, மன்னார் வீதி,  குருமன்காடு, ஏ9 வீதி தாண்டிக்குளம், ஈரட்டை, பூந்தோட்டம் ஆகிய பகுதிகளில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை ரோன் கமரா  ஊடாகவும் வவுனியாவிலுள்ள பெரும்பாலான பகுதிகளில், மக்கள் நடமாட்டம் அவதானிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.