தபால் நிலையங்கள் நாளை திறப்பு…

நாட்டில் உள்ள அனைத்து தபால் மற்றும் உபதபால் நிலையங்களும் நாளை முதல் திறக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது மக்களுக்கான இம்மாத கொடுப்பனவுகளை வழங்கல் மற்றும் மருந்துகளை பகிர்ந்தளித்தல் உள்ளிட்ட சில தேவைகளுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தபால் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

குறித்த கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்ள வரும் மக்கள், கொடுப்பனவு அட்டை அல்லது முதியோர் அடையாள அட்டையை பாதுகாப்பு தரப்பினருக்கு காண்பித்து தபால், உப​தபால் நிலையங்களுக்கு வர முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.