கர்நாடகாவில் ஜூன் 14-ந்தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு…

கர்நாடகத்தில் கொரோனா 2-வது அலையை தடுக்க கடந்த மே மாதம் 11-ந் தேதி 14 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அந்த ஊரடங்கு கடந்த மாதம் 24-ந் தேதியுடன் நிறைவடைய இருந்த நிலையில் அது மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு வருகிற 7-ந் தேதி காலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதற்கிடையே மாநிலத்தில் கொரோனா 2-வது அலை குறைந்து வருகிறது.
இந்த நிலையில் கொரோனா தடுப்பு நிபுணர் குழு, கர்நாடகத்தில் அமலில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகளை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என்று அரசுக்கு பரிந்துரை செய்தது. இதுகுறித்து முதல்-மந்திரி எடியூரப்பா பெங்களூருவில் உள்ள தனது காவேரி இல்லத்தில் மந்திரிகள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இதில் கர்நாடகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரம் நீட்டிக்க முடிவு செய்யப்பட்ட‌து.  அதன்படி ஊரடங்கு வரும் 14-ம் தேதி வரை நீட்டித்து முதலமைச்சர் எடியூரப்பா அறிவித்துள்ளார்.
மாநிலத்தில் கொரோனா கட்டுப்பாடு இதுவரை முழுமையாக கட்டுக்குள் வரவில்லை என்பதாலும், கொரோனா பரவல் சங்கிலியை உடைக்க வேண்டும் என்பதற்காகவும் ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.