ஓட்டுநர் உரிமம் பெற இனி ட்ரிவிங் டெஸ்ட் தேவை இல்லை! ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும் புதிய விதிமுறை…

இந்தியாவில் ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கான புதிய நடைமுறை வரும் ஜூலை 1 முதல் அமுலுக்கு வருகிறது.

ஓட்டுநர் உரிமத்து விண்ணப்பிக்கும் ஒருவர், ஓட்டுநர் பயிற்சி பள்ளிகளில் முறைப்படி பயிற்சியை முடித்த பிறகும், அவர்கள் ஆர்.டீ.ஓ அலுவகங்களில் ட்ரிவிங் டெஸ்ட்டில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே ட்ரிவிங் லைசன்ஸ் வழங்கப்படும் என விதிமுறை தற்போது நடைமுறையில் உள்ளது.

இந்நிலையில், ஒருவர் அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையத்தில் முறைப்படி பயின்று, உரிய சான்றிதழைப் பெற்றிருந்தால் போதும், ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும், அவர்களுக்கு ட்ரிவிங் டெஸ்ட் தேவை இல்லை என்ற புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது.

இதற்காக ஏற்கெனவே மத்திய மோட்டார் வாகனச் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு, பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று ஒரு வரைவு அறிவிப்பாணை வெளியிடப்பட்டிருந்தது. தற்போது அந்த வரைவு அறிவிப்பாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, புதிய அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்த புதிய விதி வரும் ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும் என இந்திய சாலைப் போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

இவ்வாறு மேம்படுத்தப்பட்ட ஓட்டுநர் பயிற்சி மையத்தில் பயிற்சி பெறும்போது, சிறப்புப் பயிற்சி பெற்ற ஓட்டுநர்கள் கிடைக்க வாய்ப்பு ஏற்படும். அதனால், சாலை விபத்துகள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.