தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் 5 மணி வரை செயல்பட அனுமதி…

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் அதிகமாக இருந்ததால் தளர்வுகள் அற்ற முழு ஊரடங்கு ஒரு வாரத்திற்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின் மேலும் வாரம் வாரத்திற்கு நீட்டிக்கப்பட்டது. கடந்த திங்கட்கிழமையில் இருந்து தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது.
இந்த ஊரடங்கு வருகிற திங்கட்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஒருவாரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று வாரங்களாக டாஸ்மாக் பூட்டப்பட்ட நிலையில், திங்கட்கிழமை முதல் டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட இருக்கிறது.
கூடுதல் தளர்வுகள் கொரோனா தொற்று குறைந்துள்ள 27 மாவட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும்.