நாடளாவிய ரீதியில் சுகாதார ஊழியர்களினால் முன்னெடுக்கப்பட்ட பணி பகிஸ்கரிப்பு போராட்டம்…

நாடளாவிய ரீதியில் 15 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து சுகாதார ஊழியர்கள், பணி பகிஸ்கரிப்பு போராட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த போராட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் யாழ்ப்பாணம், திருகோணமலை, மன்னார், கிளிநொச்சி ஆகிய பகுதிகளிலுள்ள சுகாதார ஊழியர்கள் மற்றும் தாதியர்களும் பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தினை முன்னெடுத்திருந்தனர்.

அந்தவகையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை முன்றலில் பதாதைகளை ஏந்தியவாறு தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்கள்  கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

அதேபோன்று திருகோணமலையிலும் இன்று  காலை 7.00 மணி முதல் 12.00 மணி வரை சுகாதார ஊழியர்கள், பணி பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

இதனால் முப்படையினரால், பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பு மருந்து ஏற்றும் நடவடிக்கைகள் மும்னெடுக்கப்பட்டன.

திருகோணமலை உவர்மலை விவேகானந்தா கல்லூரியில் பொதுமக்களுக்கு  தடுப்பு மருந்துகள் ஏற்றும் நடவடிக்கையை இன்று காலை ஆரம்பித்த இராணுவத்தினர், மதியம் வரை மேற்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து  சுகாதாரத் துறையினரால் பொறுப்பேற்கப்பட்டு தொடர்ச்சியாக தடுப்பு மருந்துகளை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

இதேவேளை கல்முனை- நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்றலிலும் சுகாதார ஊழியர்களினால் பணிப்புறக்கணிப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.