புனேயில் இருந்து சென்னைக்கு 3.65 இலட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் வந்தது.!

புனேயில் இருந்து விமானம் மூலமாக 3.65 இலட்சம் கோவிட்ஷீல்டு தடுப்பூசிகள் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளது. இன்னும் சற்றுநேரத்தில் இந்த தடுப்பூசிகள் டி.எம்.எஸ் வளாகத்தில் உள்ள தடுப்பூசி மையத்திற்கு எடுத்து செல்லப்பட்டு, மாவட்ட வாரியாக பிரித்து அனுப்பப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தடுப்பூசிகள் வருகையை அறிந்த சுகாதாரத்துறையினர் விமான நிலையத்திற்கு நேரடியாக சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொண்டுள்ளனர். விரைவில் அவை மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட இருக்கிறது.

தற்போது வந்துள்ள தடுப்பூசி மத்திய அரசின் தொகுப்பின் கீழ் தமிழகம் வந்துள்ள நிலையில், 18 வயது முதல் 44 வயதுள்ளவர்களுக்கு செலுத்தும் தொகுப்பில் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் சுத்தமாக தடுப்பூசிகள் இல்லை என்ற நிலையில் நேற்று கோவேக்சின் தடுப்பூசி வந்தது குறிப்பிடத்தக்கது.