பிரித்தானியாவில் பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்தை எட்டியுள்ளது..!

பிரித்தானியாவில் கடந்த ஏப்ரல் மாத பொது முடக்கக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதால், பொருளாதார வளர்ச்சி மீண்டும் பழைய வேகத்துக்கு வந்துள்ளதாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் (ஓஎன்எஸ்) தரவுகள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் மாதத்தில் நாட்டின் பொருளாதாரம் 2.3 சதவீதம் வளர்ச்சியடைந்ததாக தேசிய புள்ளிவிபரங்களுக்கான அலுவலகம் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டு ஜூலை மாதத்துக்குப் பிந்தைய மிக அதிகமான வளர்ச்சி வீதமாகும்.

மொத்த உள்நாட்டு உற்பத்தியானது தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக உயர்ந்துள்ளது. ஏனெனில் பிரித்தானியாவின் நான்கு நாடுகளிலும் தொற்றுநோய்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

கொரோனா தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்ட பிறகு, நாடடில் அத்தியாவசிமற்ற பொருள்களுக்கான விற்பனையகங்கள், சிகை அலங்கார மையங்கள் போன்றவற்றைத் திறக்க அனுமதித்ததால் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

300 ஆண்டுகளுக்கும் மேலாக உற்பத்தியில் ஏற்பட்ட மிகப்பெரிய சரிவிலிருந்து பொருளாதாரம் மீண்டு வருவதால், ஏப்ரல் மாதத்தில் ஆண்டு வளர்ச்சி வீதம் 27.6 சதவீதம் என்று ஓஎன்எஸ் கூறியுள்ளது.