பொருளாதார மத்திய நிலையங்கள் கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன…

நாட்டிலுள்ள பொருளாதார மத்திய நிலையங்கள் அனைத்தையும் மொத்த விற்பனைக்காக இன்றும் (சனிக்கிழமை) நாளையும் திறக்கப்படவுள்ளன.

குறித்த நாட்களில் மொத்த விற்பனையாளர்கள் மற்றும் நடமாடும் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்கள் நேரடியாக பொருளாதார மத்திய நிலையங்களுக்கு சென்று, மரக்கறிகள் மற்றும் பழ வகைகளை கொள்வனவு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுகாதார நடைமுறைகளை பின்பற்றியே வாராந்த சந்தைகள் திறக்கப்படும் என்பதுடன்   மட்டுப்படுத்தப்பட்ட அளவினரை மாத்திரம் அனுமதிக்க முடியும் என இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளமையை தொடர்ந்தே பொருளாதார மத்திய நிலையங்களை இன்றும்  நாளையும் திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.