முல்லைத்தீவு காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்பு…

முல்லைத்தீவு மாவட்டத்தின் காட்டுப்பகுதியில் மோட்டார் குண்டுகள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து குறித்த இடத்தில சோதனை நடத்தப்பட்டது.

இதன்போது அங்கிருந்து செயலிழக்காத நிலையில் காணப்பட்ட 15 மோட்டார் குண்டுகள் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து விசேட அதிரடிப்படையினருக்கு தகவல் வழங்கப்பட்டு மோட்டார் குண்டுகள் மீட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.