இணையத் தளம் ஊடாக மதுபான விற்பனை -இறுதி முடிவு..!

இணையதளமூடாக  மதுபான விற்பனை நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என  ராணுவத்தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்

கொரோனா தடுப்பு தேசிய செயலணியின் தீர்மானத்துக்கு அமைய  இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராணுவத் தளபதி குறிப்பிட்டுள்ளார்.

இணையதளமூடாக  மதுபான விற்பனை  தொடர்பில்  கொரோனா தடுப்பு தேசிய செயலணியுடன் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இந்த நிலையில், இணையத்தளம் ஊடாக நுகர்வோருக்கு மதுபானம் விற்பனை செய்வதற்கு நிதி அமைச்சு நேற்று  அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இணையத்தளம் ஊடாக நுகர்வோருக்கு மதுபானம் விற்பனை செய்யும் செயற்றிட்டம் தேசிய கொரோனா தடுப்பு செயலணியின் அனுமதியின் பின்னரே நடைமுறைப்படுத்தப்படுமென மதுவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.