துபாயில் உயர் ரக கார்களில் ஓட்டுநர் பயிற்சியா..? ஆச்சரியத்தில் கார் பிரியர்கள்!!

 

பென்ஸ், பென்ட்லி, லம்போர்கினி உள்ளிட்ட உயர் ரக கார்களுடன் துபாயில் இயங்கி வரும் ஓட்டுநர் பயிற்சி பள்ளி சொகுசு கார் பிரியர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.

பல கோடி ரூபாய் செலவழித்து சொகுசு கார்களை வாங்குபவர்கள் பெரும்பாலும் சாதாரன கார்களை ஓட்டியே பயிற்சி பெறுகின்றனர். இதனால் தாங்கள் வாங்கும் கார்களில் உள்ள நவீன வசதிகள் மற்றும் அவற்றை கையாளும் முறை குறித்து முழுமையாகக் கற்றுக் கொள்ள முடியாத நிலை ஏற்படுகிறது.

இந்தக் குறையைப் போக்குவதற்காக எமிரேட்ஸ் டிரைவிங் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்தில் பல விதமான விலை உயர்ந்த கார்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு ஒட்டுநர் பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்காக 75 ஆயிரம் ரூபாய் முதல் நாலே கால் லட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.