இயக்குனர் ஷங்கர் மகளுக்கு பிரபல கிரிக்கெட் வீரருடன் திருமணம் நடந்து முடிந்தது..!

இயக்குனர் ஷங்கர் மகளும், கிரிக்கெட் வீரர் ரோஹித்துக்கும் இன்று திருமணம் நடந்து முடிந்துள்ளது.

இந்திய சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஷங்கரும் ஒருவர். இவருக்கு ஐஸ்வர்யா, அதிதி என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர். மூத்த மகள் ஐஸ்வர்யா டாக்டராக உள்ளார்.

தொழிலதிபரும், கிரிக்கெட் அணியின் உரிமையாளர் தாமோதரனின் மகனுமான கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும், இவருக்கும் சில மாதங்களுக்கு முன் திருமணம் நிச்சயம் ஆனது.

இவர்களது திருமணம் பொள்ளாச்சியில் நடப்பதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில் ஐஸ்வர்யா ஷங்கர் – ரோஹித் தாமோதரன் திருமணம் இன்று காலை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள வெல்கம் ஹோட்டலில் இனிதே நடைபெற்றது.

கொரோனா பாதுகாப்பு கருதி மணமகன், மணமகளின் பெற்றோர் மற்றும் மிக முக்கிய சொந்தங்கள் மட்டுமே கலந்து கொண்டு நடைபெற்ற இத்திருமணத்தில் காலை 11.15க்கு ஐஸ்வர்யா கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார் ரோஹித்.

தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று மணமக்களை வாழ்த்தினார். அவருடன் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன், நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி ஆகியோரும் மணமக்களை நேரில் வாழ்த்தினர்.