உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்- இந்தியாவுக்கு முதல் தங்கம்

image_pdfimage_print
குரோஷியாவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இதில், இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.
இறுதிச்சுற்றில் சர்னோபத் 39 புள்ளிகள் பெற்றார். பிரான்ஸ் வீராங்கனை மதில்தே லமோலே, 31 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகெர், 7வது இடத்திற்கு பின்தங்கி ஏமாற்றம் அளித்தார்.
முந்தைய போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.