கணவனுடன் சென்ற பெண் மயங்கி விழுந்து உயிரிழப்பு- யாழில் சம்பவம்…

கணவருடன் முச்சக்கர வண்டியில் ஆலயத்திற்கு சென்று கொண்டிருந்த பெண், திடீரென மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் யாழ்ப்பாணம்- வேலணை பகுதியினைச் சேர்ந்த 32 வயதுடைய பெண்ணே உயிரிழந்துள்ளார் .

சுன்னாகத்திலுள்ள ஆலயமொன்றுக்கு கணவனுடன் முச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்தபோது,  திடீரென மயக்கமுற்றுள்ளார்.

அதனைத் தொடர்ந்து அவரை உடனடியாக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றபோது, அவர் ஏற்கனவே உயிரிழந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.