முல்லைத்தீவில் வாள்வெட்டுக் குழு அட்டகாசம்…

முல்லைத்தீவு- கள்ளப்பாட்டுப் பகுதியில் வீடு ஒன்றுக்குள் நுழைந்த குழுவொன்று அங்கிருந்தவர்கள் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.

அதன் பின்னர் அங்கிருந்த இரண்டு வாகனங்களுக்கு  தீ வைத்துவிட்டு, அவ்விடத்திருந்திலிருந்து குறித்த குழு தப்பிச் சென்றுள்ளது.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற இந்த வாள் வெட்டுத் தாக்குதலுக்கு இலக்கான ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டதுடன்  ஒருவருக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும்  தீ வைக்கப்பட்ட வாகனங்களில் கார் ஒன்று முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

இந்நிலையில் சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.