அதிக விலைக்கு அரிசி விற்பனை – ஒரு இலட்சம் ரூபாய் அபராதம்..!

கட்டுப்பாட்டு விலையைவிட அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு ஒரு இலட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படவுள்ளது.

இந்த விடயம் குறித்து நேற்று(திங்கட்கிழமை) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதிக விலைக்கு அரிசி விற்கும் வர்த்தகர்களுக்கு தற்போது 2500 ரூபாய் அபாராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையிலேயே இந்த புதிய அபராத தொகையை பெறுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.