காதலை காதலன் முறித்து கொண்டதால் காதலி செய்த அதிர்ச்சி செயல்…

காதலன் காதலை முறித்து கொண்ட ஆத்திரத்தில் அவரின் பைக்கை காதலி தீவைத்து கொளுத்திய பரபரப்பு வீடியோ வெளியாகியுள்ளது.

பாங்காக்கைச் சேர்ந்த 36 வயது பெண் தான் நேசித்த காதலன் காதலை திடீரென முறித்து கொண்டதால் ஆத்திரத்தின் உச்சிக்கு சென்றுள்ளார்.

இதனை தொடர்ந்து காதலன் பணிபுரியும் இடத்திற்கு சென்ற அவர் தான் அன்புப் பரிசாக அளித்த 28 லட்சம் ரூபாய் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தை தீ வைத்து கொளுத்தினார்.

அவரது இந்த செயல் வாகன நிறுத்தம் இடத்தில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி உள்ளது. இந்த சம்பவத்தில் யாரும் காயமடையவில்லை என்றாலும், அருகில் நிறுத்தப்பட்டிருந்த மற்ற ஆறு வாகனங்கள் தீயில் எரிந்து நாசமாயின.

இந்த சம்பவம் தொடர்பாக குறித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.