கோவையில் வாலிபருக்கு கத்திக்குத்து- 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு…

image_pdfimage_print
கோவை புலியகுளம் ஏரிமேடு பாலசுப்ரமணியன் வீதியை சேர்ந்தவர் ஆபிரகாம். இவருடைய மகன் இம்மானுவேல் (வயது 20). கல்லூரி படிப்பை முடித்த இவர் வேலைக்காக முயற்சி செய்து வருகிறார். இவர் இரவில் தனது வீட்டு முன்பு நின்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் திடீரென இறங்கி இம்மானுவேலை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி சென்றது. இதில் அவருக்கு தலை மற்றும் கையில் சரமாரியாக கத்திக்குத்து விழுந்தது.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் ராமநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இந்த தாக்குதலுக்கு காரணம் என்ன? என்பது குறித்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். அத்துடன் தப்பி ஓடிய அந்த கும்பலை வலைவீசி தேடி வருகிறார்கள்.