ராமநாதபுரம் அருகே மின்சாரம் தாக்கி கொத்தனார் பலி…

image_pdfimage_print

ராமநாதபுரம் கொத்தர் தெரு பகுதியை சேர்ந்தவர் கார்த்திக்(வயது 32). கொத்தனார் வேலை பார்த்து வந்த இவர் ராமநாதபுரம் யானைக்கல் வீதி பகுதியில் உதயசூரியன் என்பவரின் வீட்டில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக மின்சார வயரில் உரசி உடலில் மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்துபோனார்.

இது குறித்து ராமநாதபுரம் பஜார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.