வுஹான் ஆய்வகத்தின் அசாதாரணம்? முதல்முறையாக உடைத்துப் பேசிய வெளிநாட்டு விஞ்ஞானி…

உலக நாடுகளை மொத்தமாக ஸ்தம்பிக்க வைத்துள்ள கொரோனா தொற்றின் பிறப்பிடமாக கருதப்படும் வுஹான் ஆய்வகம் தொடர்பில் வெளிநாட்டு விஞ்ஞானி ஒருவர் விளக்கமளித்துள்ளார்.

சீனாவின் வுஹான் ஆய்வகத்தில் 5 ஆண்டுகளுக்கு முன்னர் பணியாற்றியிருந்த விஞ்ஞானி Danielle Anderson, வுஹான் ஆய்வகத்தில் இருந்து கொரோனா கிருமிகள் வெளியேறியது என்ற கருத்தை முற்றாக மறுத்துள்ளார்.

தாம் அந்த ஆய்வகத்தில் பணியாற்றிய காலகட்டத்தில், சீன விஞ்ஞானிகளை தவிர்த்து வெளிநாட்டினர் தாம் மட்டுமே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது மெல்போர்னில் பணியாற்றிவரும் விஞ்ஞானி டேனியல் ஆண்டர்சன் வுஹான் ஆய்வகத்தில் 2016 முதல் 2019 நவம்பர் வரை ஆய்வு மேற்கொண்டு வந்துள்ளார்.

வெளவால்களால் நோய் கிருமிகள் பரவுவது கண்டறியப்பட்ட நிலையில், அந்த கிருமிகளால் வெளவால்களுக்கு ஏன் பாதிப்பு ஏற்படவில்லை என்பதே இவர் முன்னெடுத்த ஆய்வு.

வுஹான் ஆய்வகத்தில் பணியாற்றிய பலர், கொரோனா போன்ற தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவ சிகிச்சையை நாடியதாக அமெரிக்க உளவு அமைப்புகள் தகவல் வெளியிட்டிருந்த நிலையில்,

அவ்வாறு நடந்திருதால், தாம் ஏன் பாதிக்கப்படவில்லை எனவும், 2019 நவம்பர் வரையில் அந்த ஆய்வகத்தில் தாம் பணியாற்றி வந்துள்ளதையும் விஞ்ஞானி டேனியல் சுட்டிக்காட்டியுள்ளார்.