2-வது மனைவிக்கு… 3-வது பெண்ணின் தூண்டுதலால் உடல் முழுவது சூடு போட்ட கணவன்..!

image_pdfimage_print

தமிழகத்தில் மனைவிக்கு தெரியாமல், காதலியுடன் குடித்தனம் நடத்தி வந்த கணவன், மனைவி மீது சந்தேகப்பட்டு, அவர் உடல் முழுவது சூடு போட்டு சித்ரவதை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தர்மபுரி மாவட்டம் பெண்ணாகரம் அருகே ஏரியூர் அடுத்து உள்ள எம்.தண்டா கிராமத்த்தை சேர்ந்தவர் பாண்டியன். இவருக்கும், பத்ரஅள்ளி கிராமத்தை சேர்ந்த கலைவாணி என்பவருக்கும் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த தம்பதிக்கு தற்போது 5 மற்றும் 3 வயதில் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், பாண்டியன் ஏற்கனவே திருமணம் ஆகி, அவரின் முதல் மனைவி இறந்த பின்னரே, கலைவானியை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.

ஆனால், கலைவானிக்கு இந்த விவகாரம் இப்போது தெரியவர, இது குறித்து கேட்ட போது, இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வராமல் இருந்த பாண்டியன், அப்பகுதியில் இருக்கும் நெருப்பூரைச் சேர்ந்த திருமணம் ஆன பெண் ஒருவருடன் பழகி, அவருடன் தனிக்குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இதற்கிடையில் கலைவானி, பாண்டியனை அழைக்கும் போது, காதலியின் பேச்சைக் கேட்டு, அவர் மீது சந்தேகப்பட்டு தொடர்ந்து அடித்து துன்புறுத்தி வந்துள்ளார். அதுமட்டுமின்றி ஒரு கட்டத்தில் குழந்தைகள், கலைவானி என அனைவரையும் வீட்டை விட்டு விரட்டியுள்ளார்.

அதன் பின் ஊர் பெரியவர்கள் பேசி சமாதானம் செய்து அனுப்பி வைக்க, கடந்த 15 நாட்களுக்கு முன்பு பாண்டியன் மற்றும் அவரது பெற்றோர் குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கலைவாணியை வலுகட்டாயமாக குடிக்கவைத்துள்ளனர்.

அவர் மயக்கமடைந்து அரை மயக்கத்தில் இருந்த நிலையில் கலைவாணியின் கை, கால், மார்பு மற்றும் அந்தரங்க பகுதி என உடல் முழுவதும் 16 இடங்களில் பழுக்கை காய்ச்சிய இரும்பு கம்பியால் ஈவிரக்கமின்றி சூடு வைத்து சித்ரவதை செய்துள்ளனர்.

அப்போது அலறல் சத்தம் வெளியே கேட்டுவிடகூடாது என்பதற்காக கலைவாணியின் கை, கால்களை கட்டிவைத்தும், வாயில் துணி வைத்து இறுக்கமாக கட்டியுள்ளனர்.

சுமார்1 மணி நேரம் கழித்து அவர்களே கயிற்றை அகற்றிய பின்பு இது சம்மந்தமாக யாரிடமாவது கூறினால் உன்னையும், குழந்தைகளையும் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளனர்.

இதையடுத்து, கணவர் வீட்டில் யாரும் இல்லாத போது அங்கிருந்து தப்பிய கலைவானி தாய்வீட்டுக்குச் சென்று தனக்கு நடந்த கொடுமையை பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

கலைவாணியின் பெற்றோர் அவரை பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

அதன் பின், தனக்கு நிகழ்ந்த கொடுமையை புகைப்பட ஆதாரங்களுடன் பென்னாகரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததாகவும், கணவர் மீது மட்டும் பொலிசார் வழக்கு பதிவு செய்து விட்டு மற்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என்று கலைவானி குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையில் கலைவானியின் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு சென்று, பாண்டியன் அவரது பெற்றோர் மற்றும் தகாத உறவு வைத்துள்ள பெண் மீது உரிய நடவடிக்கை எடுத்து, கலைவானிக்கும், அவரது குழந்தைகளுக்கும் உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என புகார் அளித்துள்ளனர். அடுத்தடுத்த விசாரணைக்கு பின்னரே முழு விபரம் தெரியவரும்.