கப்பல் தீ விபத்து – இதுவரையில் 200 கடல்வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு..!

image_pdfimage_print

தீ விபத்துக்கு உள்ளான எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பலால் கடல்சார் சூழலுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காரணமாக 200 கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளன.

இந்த விடயம் தொடர்பாக சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம் கொழும்பு நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளார்.

இதற்கமைய, 176 ஆமைகள், 4 திமிங்கிலங்கள் மற்றும் 20 டொல்பின்கள் இவ்வாறு உயிரிழந்துள்ளன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பை அண்மித்தப் பகுதியில் கடந்த மாதம் எக்ஸ்ப்ரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.