தமிழ் சின்னத்திரை நடிகரால் ஆசிரியைக்கு நேர்ந்த கொடுமை… அதிர்ச்சி சம்பவம்…

image_pdfimage_print

தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வழங்குவதாக ஆசைக்காட்டி ஆசிரியை ஒருவரை சின்னத்திரை நடிகர் ரகு கர்ப்பமாக்கி கருக்கலைப்பு செய்ததாக புகார் தரப்பட்டும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சென்னை பல்லாவரம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வாங்கி தருவதாக கூறி அவரிடம், 52 வயதாகும் சின்னத்திரை நடிகர் ரகு நெருங்கி பழகியதாக கூறப்படுகிறது. நடிகர் மட்டும் அல்லாமல் தொலைக்காட்சி தொடர்களில் மேனேஜராக பணிபுரிவதாகவும் ரகு கூறியுள்ளார்.

மேலும் மனைவி புற்றுநோயால் இறந்துவிட்டதால், ஆசிரியையிடம் உன்னை திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தை கூறியிருக்கிறார். இதனை நம்பி ஆசிரியை, ரகுவுடன் நெருங்கி பழகி வந்ததில் 4 முறை கர்ப்பமாகி கருவைக் கலைக்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக வேதனை தெரிவித்து பொலிசில் சில மாதங்களுக்கு முன் புகார் அளித்துள்ளார்.

இந்த நிலையில், ஆசிரியை மீதான மோகம் தீர்ந்ததும் அவரை கழற்றிவிட்ட ரகு, ஆசிரியையின் இருசக்கர வாகனத்தையும், 2 சவரன் செயினையும் எடுத்துக் கொண்டு சென்றுவிட்டதாக கூறப்படுகின்றது.

ரகு தன்னை ஆசைவார்த்தை கூறி வாழ்க்கையை சீரழித்து விட்டதாக சிட்லபாக்கம் காவல் நிலையத்தில் ஆசிரியை புகார் அளித்தபோது, ரகுவை அழைத்து விசாரிக்காமல், தனது இரு சக்கர வாகனத்தையும் நகையையும் பெற்றுக்கொடுத்து விட்டு வழக்கை விசாரிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது.

தனது புகாரின் மீது நடவடிக்கை மேற்கொள்ள காவல்துறையினருக்கு உத்தரவிடக்கோரி நீதிமன்றத்தில் அந்த ஆசிரியை முறையிட்டார். இதையடுத்து ஆசிரியையின் புகார் மீது விசாரித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள நீதிமன்றம் கடந்த மார்ச் மாதம் உத்தரவிட்டது.

ஆயினும் காவல்துறையினர், மாதக்கணக்கில் காலம் தாழ்த்தி வருவதாக கூறப்படுகின்றது. இதற்கிடையே ரகு மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாததால், புகார்களை வாபஸ் பெறுமாறு தன்னை மிரட்டி வருவதாகவும், காவல்துறையினர் தனது புகார் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சினிமா மோகத்தால் ஏமாந்து நிற்கு ஆசிரியை வேண்டுகோள் வைத்துள்ளார்.