புதுச்சேரியில் பீச், பூங்கா திறப்பு.! வெளியான புதிய தளர்வுகள்..!

புதுச்சேரியில் கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 9 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருபதாவது,

புதுச்சேரியில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு ஜூலை 15ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடற்கரை சாலை, பூங்காக்கள் காலை 9 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

கோவில்களை மாலை 5 மணிக்கு பதில் இரவு 9 மணி வரை திறந்திருக்கவும் அனுமதி அளிக்கப்படுகிறது.

உடற்பயிற்சி கூடங்கள் 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் செயல்படவும் அரசு அனுமதி அளிக்கப்படுகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது,