ஓடும் ரயிலில் ஏற முயன்ற நபருக்கு நேர்ந்த கதி..! அதிர வைத்த சம்பவம்…

இந்தியாவில் பயணி ஒருவர் ஓடும் ரயிலில் ஏற முயன்ற தவறி விழுந்த சம்பவத்தின் வீடியோ வெளியாகியுள்ளது.

இச்சம்பவம் ஜூன் 29ம் திகதி மும்பை போரிவாலி ரயில் நிலையத்திலே நடந்துள்ளது.

ரயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமெராவில் பதிவான காட்சி தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதில் ஓடும் ரயிலின் கதவுக்கு அருகே இருக்கும் கம்பியை பிடித்து ஏற முயலும் நபர், தடுக்கி ரயிலுக்கும் நடைபாதைக்கும் இடையே உள்ள இடைவெளியில் விழுகிறார்.

அதிர்ஷ்டவசமாக உள்ளே விழாமல் நடைபாதை மீதே விழுந்து கிடக்கிறார். உடனே அங்கிருந்த ரயில்வே பொலிஸ் அதிகாரி ஓடி வந்த விழுந்த கிடந்த நபரை இழுத்து மீட்டுள்ளார்.

மக்களிடையே விழுப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் குறித்த பதற வைக்கும் காட்சி வெளியிடப்பட்டுள்ளது.