கொழும்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 365 பேருக்கு தொற்று உறுதி…

நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் அடையாளங்காணப்பட்ட ஆயிரத்து 864 கொரோனா நோயாளர்களில் அதிகளவானோர் கொழும்பு மாவட்டத்திலேயே அடையாளம் காணப்பட்டுள்ளனர்

அதன்படி, கடந்த 24 மணித்தியாலங்களில் கொழும்பு மாவட்டத்தில் 365 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அத்தோடு, கம்பஹா மாவட்டத்தில் 221 பேருக்கும் கண்டி மாவட்டத்தில் 81 பேருக்கும் யாழ். மாவட்டத்தில் 23 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல புத்தளம் மாவட்டத்தில் 33 பேருக்கும் அம்பாறை மாவட்டத்தில் 45 பேருக்கும் நுவரெலியா மாவட்டத்தில் 97 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறே, பதுளை மாவட்டத்தில் 40 பேருக்கும் மட்டக்களப்பு மாவட்டத்தில் 100 பேருக்கும் கிளிநொச்சி மாவட்டத்தில் 06 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஐவருக்கும் திருகோணமலை மாவட்டத்தில் 07 பேருக்கும் வவுனியா மாவட்டத்தில் 07 பேருக்கும் மன்னார் மாவட்டத்தில் 08 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.