மனைவியுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட இந்திய அணி நட்சத்திர வீரர் பும்ரா! விமர்சித்த ரசிகர்கள்…

மனைவியுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை இந்திய கிரிக்கெட் அணியின் வீரர் பும்ரா வெளியிட்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக திகழ்பவர் பும்ரா. இவர் தொலைக்காட்சி தொகுப்பாளினி சஞ்சனா கணேசனை சில மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்து கொண்டார்.

சஞ்சனா கணேசனின் பூர்வீகம் தமிழகம் தான். இவரின் தந்தை கணேசன் ராமசாமி தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர். ஆனால், தற்போது இருப்பது எல்லாம் மகாராஷ்டிராவின் புனேவில் தான் உள்ளார்கள்.

இந்த நிலையில் மனைவியுடன் எடுத்து கொண்ட சமீபத்திய புகைப்படத்தை பும்ரா டுவிட்டரில் வெளியிட்டுள்ளார். அதில் இருவரும் சிரித்தபடி இருக்கின்றனர்.

புகைப்படத்தில் தம்பதி அழகாக இருப்பதாக பலரும் கருத்து தெரிவித்த போதிலும் சிலர் பும்ராவை விமர்சித்துள்ளனர்.

அதாவது, சமீபத்தில் தான் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா தோல்வியடைந்தது. ஆனால் நீங்கள் சிரிக்கிறீர்கள். சில நாட்களுக்கு சமூகவலைதளங்களில் இது போல பதிவிடாதீர்கள் என தெரிவித்துள்ளனர்.