மூன்று பெண் நோயாளிகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றசாட்டில் ஆண் செவிலியர் கைது…

அமெரிக்காவில் ஆண் செவிலியர் ஒருவர் மூன்று பெண் நோயாளிகள் மீது பாலியல் தாக்குதல் நடத்திய குற்றசாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாண்டா அனாவை சேர்ந்தவர் பவுல் மில்லர் (56). தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் தங்களிடம் மருத்துவமனையில் மோசமாக நடந்து பாலியல் தாக்குதல் நடத்தியதாக மில்லர் மீது மூன்று பெண்கள் புகார் கொடுத்துள்ளனர்.

22, 56, 68 வயதான மூன்று பெண்களே புகார் கொடுத்தவர்கள் ஆவர். இதை தொடர்ந்து பொலிசார் நேற்று மில்லரை அவர் வீட்டில் வைத்து கைது செய்தனர்.

மில்லரால் வேறு சிலரும் பாதிக்கப்பட்டிருக்கலாம் என கருதும் அதிகாரிகள் அது குறித்து தகவல் தெரிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.