ஸ்புட்னிக் லைட் தடுப்பூசியின் பரிசோதனைக்கு தடை..!

ஸ்புட்னிக் லைட் கொரோனா தடுப்பூசிக்கான 3 ஆம் கட்ட சோதனை நடவடிக்கைக்கான அனுமதியை மத்திய அரசு மறுத்துள்ளது.

ஒருமுறை மட்டுமே செலுத்தும் ஸ்புட்னிக் லைட் தடுப்பூசிக்கான மூன்றாம் கட்ட பரிசோதனையை இந்தியாவில் டொக்டர் ரெட்டீஸ் நிறுவனம் மேற்கொள்ள இருந்தது. இந்நிலையிலேயே அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் ஏற்கனவே இரண்டு முறை செலுத்தப்படும் கோவிஷீல்டு, கோவேக்சின் மற்றும் ஸ்புட்னிக் வி உள்ளிட் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஒரு சில நாட்களுக்கு முன்பு அமெரிக்காவின் மொடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.