இந்த மாதம் திறக்கப்படும் பாடசாலைகள் தொடர்பான அறிவிப்பு…!

100ற்கு குறைவான மாணவர்களுடன் இயங்கும் பாடசாலைகளை ஜுலை மாதத்திற்குள் ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவிக்கின்றார்.

கடுமையான சுகாதார நடைமுறைகளின் கீழ், குறித்த பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி, முதற்கட்டமாக நாடு முழுவதும் உள்ள 2962 பாடசாலைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுப்பதாக அவர் கூறியுள்ளார்.