கனடாவில் விக்டோரியா மகாராணி மற்றும் எலிசபெத் மகாராணியின் சிலைகள் உடைப்பு..!

கனடாவில் விக்டோரியா மகாராணி மற்றும் எலிசபெத் மகாராணியின் சிலைகளை போராட்டகாரர்கள் உடைத்து கவிழ்த்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மாதம் கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம், கம்லூப்ஸ் நகரில் உள்ள உறைவிடப் பள்ளியில் ஆய்வு நடத்தப்பட்டது.

அப்போது பூமிக்கடியில் 215 குழந்தைகளின் எலும்புக் கூடுகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது உலகையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சமீபத்தில் Saskatchewan மாகாணத்தில் உள்ள உறைவிடப் பள்ளியில் நூற்றுக்கணக்கான குழந்தைகளின் எலும்பு கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

தொடர்ந்து கனடாவில் உள்ள மூடப்பட்ட உறைவிடப் பள்ளிகளில் குழந்தைகளின் எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டு வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், கடந்த மாதம் உறைவிடப் பள்ளியில் எலும்பு கூடுகளாக கண்டுபிடிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அஞ்சலி செலுத்தும் பேரணிகள் நடந்தது.

Winnipeg நகரில் நடந்த அஞ்சலி பேரணியின் போது போராட்டகாரர்கள் விக்டோரியா மகாராணி மற்றும் எலிசபெத் மகாராணியின் சிலைகளை உடைத்து கவிழ்த்தனர், குறித்த வீடியோ இணையத்தில் தீவிரமாக பரவி வருகிறது.