பள்ளிக்கூட கழிப்பறைக்குள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட ஆசிரியை…

image_pdfimage_print

இந்தியாவில் பள்ளி கழிப்பறையில் ஆசிரியை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அரசு உயர்நிலை பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தவர் புவனா பென் (34). இவருக்கு சமீபத்தில் தலைமை ஆசிரியையாக பதவி உயர்வு கிடைத்துள்ளது.

இந்த நிலையில் நேற்று காலை சிறிது சீக்கிரமாக பள்ளிக்கு புவனா வந்திருக்கிறார். பின்னர் கழிப்பறைக்கு சென்ற அவர் வெகுநேரமாக வெளியில் வரவில்லை.

இதனால் சந்தேகமடைந்த சக ஆசிரியைகள் கதவை தட்டினார்கள், ஆனாலும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து கொண்டு உள்ளே போன போது அவர்களுக்கு அதிர்ச்சி தரும் காட்சி காத்திருந்தது.

அதன்படி புவனா கழிப்பறை ஜன்னல் கம்பியில் தூக்கில் சடலமாக தொங்கியபடி கிடந்தார். இது குறித்த தகவலின் பேரில் பொலிசார் அங்கு வந்து புவனாவின் சடலத்தை கைப்பற்றியதோடு அவர் எழுதி வைத்திருந்த கடிதத்தையும் கைப்பற்றினார்கள்.

புவனா குடும்பத்தார் கூறுகையில், புவனாவுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆகிறது, அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

சமீபகாலமாக புவனா மிகுந்த மன அழுத்தத்தில் இருந்து வந்தார், இதுவே தற்கொலைக்கு காரணமாக இருக்கலாம் என கூறியுள்ளனர்.

புவனா கடிதத்தில் என்ன எழுதியிருந்தார் என இன்னும் தெரியாத நிலையில் பொலிஸ் விசாரணையில் பல உண்மைகள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.