மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை- நெடுந்தீவில் சம்பவம்…

யாழ்ப்பாணம்- நெடுந்தீவில் மீன்பிடிக்க கடலுக்கு சென்றவரை காணவில்லை என அவர்களது உறவினர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நெடுந்தீவு 8ம் வட்டாரத்தை சேர்ந்த சில்வர் ஸ்டார் மரியதாஸ் என்பவர் நேற்று (வியாழக்கிழமை) காலை, கடலுக்குச் சென்று இன்னும் கரை திரும்பவில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கடலுக்கு சென்றவர் தொடர்பான விவரங்களை சேகரித்த மாவட்ட செயலக அனர்த்த முகாமைத்துவ பிரிவு, அவரை தேடும் நடவடிக்கையை முன்னெடுப்பதற்காக உரிய தரப்பினருக்கு  அதனை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.