உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்தது சஜித் தரப்பு…!

தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் மக்களை கைது செய்கின்றமைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பிரதான எதிர்கட்சியினரான ஐக்கிய மக்கள் சக்தியினரால் இன்றைய தினம் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக சுகாதார சேவைகள் பணிப்பாளர் வெளியிட்ட வழிகாட்டுதல்களை பயன்படுத்தி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்பவர்களை கைது செய்வதற்கு பொலிஸார் எடுக்கும் நடவடிக்கையின் ஊடாக அடிப்படை உரிமைகள் மீறப்படுதவாக தீர்ப்பளிக்குமாறு அவர்கள் குறித்த மனுவின் ஊடாக கோரிக்கை விடுத்துள்ளனர்.