பரிசில் காணாமல் போன இளைஞன் நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்பு!!

பரிசில் கடந்த ஜூலை 4 ஆம் திகதி காணாமல் போயிருந்த இளைஞன் ஒருவன், சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான்.
கடந்த ஜுலை 4 ஆம் திகதி 22 வயதுடைய Keylan  எனும் இளைஞன் காணாமல் போயிருந்தான். இளைஞன் குறித்த எந்த ஒரு தகவல்களும் கிடைக்கப்பெறாத நிலையில், காவல்துறையினரிடம் புகார் அளிக்கப்பட்டதுடன், துண்டு பிரசுரங்கள், சுவரொட்டிகள் மூலம் இளைஞன் குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், குறித்த இளைஞன் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு, பரிஸ் 18 ஆம் வட்டாரத்தில் உள்ள மெற்றோ மேம்பாலமான pont du métro Jaurès இன் கீழ் வைத்து சடலமாக மீட்க்கப்பட்டுள்ளான். சிறிய கூடாரம் ஒன்றினால் மூடப்பட்டிருந்த நிலையில் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் மரணத்திற்கு பின்னால் உள்ள மர்மங்களை காவல்துறையினர் ஆராய்ந்து வருகின்றனர்.