புலமைப்பரிசில், உயர்தர பரீட்சைகள் நடைபெறும் திகதிகள் அறிவிப்பு…!

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை ஒக்ரோபர் 3 ஆம் திகதியும், கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையை ஒக்ரோபர் 4ஆம் திகதியிலிருந்து 31 ஆம் திகதி வரையும் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்னர் பாடசாலைகளின் ஆசிரியர்கள், பணியாளர்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.