மணிப்பூரில் மிதமான நிலநடுக்கம் பதிவு..!

மணிப்பூரில் இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை மிதமான நிலநடுக்கம் ஒன்று உணரப்பட்டுள்ளதாக நில அதிர்வு தேசிய மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.5 ஆகப் பதிவாகியுள்ளதாகவும் நில அதிர்வு மையம் குறிப்பிட்டுள்ளது.

மணிப்பூரின் உக்ருல் நகரில் இருந்து தென்கிழக்கே 57 கி.மீ தொலைவில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

அண்மைகாலமாக இந்தியாவில் வட மாநிலங்களில் அடிக்கடி நிலநடுக்கங்கள் பதிவாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.