இந்த வார இ.று.தி.யி.ல் முடக்கப்படுமா நாடு..? இராணுவத் தளபதியின் தீ.டீ.ர் த.க.வ.ல்..!!

image_pdfimage_print

மீண்டும் முடக்கமா….

தற்போது நாட்டில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த வார இறுதி நாட்களில் பயணக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்பதைத் தீ.ர்.மா.னி.க்.க, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், கொரோனாவை தடுப்பதற்கான ஜனாதிபதி செயலணிக்கும் இடையே இன்று காலை மற்றொரு முக்கியமான சந்திப்பு நடைபெறும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்க அமைச்சர்கள், சுகாதார சேவைகள் இயக்குநர்கள், மற்றும் பல வைத்திய நிபுணர்களின் பங்கேற்புடன் இந்த கூட்டம் நடைபெறும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இதன்போது, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்துவது தொடர்பான முடிவுகள் எடுக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.

மேலும் ஊரடங்கு குறித்து நிபுணர்கள் ஊடகங்களுக்கு அறிக்கைகள் அளித்திருந்தாலும், கொரோனா செயலணி இது குறித்து ஒரு கோ.ரி.க்.கை கூட செய்யப்படவில்லை.
எனினும், இன்றைய கூட்டத்தில் இந்த விடயம் கவனிக்கப்பட வாய்ப்புள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.