இ.ன்.று அமைச்சரவையில் புதிய மா.ற்.ற.ம்…!

அமைச்சரவையில் மா.ற்.ற.ம்…!

இன்று அமைச்சரவை அமைச்சுக்கள் சிலவற்றில் புதிய மா.ற்.ற.ங்.க.ள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய கல்வி அமைச்சராக இருந்த பேராசிரியர் ஜீ.எல் பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகவும், வெளிவிவகார அமைச்சராக இருந்த தினேஸ் குணவர்தன கல்வி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சராக இருந்த பவித்ரா வன்னியாராச்சி போக்குவரத்து அமைச்சராகவும், ஊடகத்துறை அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல்ல சுகாதார அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

அடுத்து எரிசக்தி அமைச்சராக இருந்த டலஸ் அழகப்பெரும ஊடகத்துறை அமைச்சராகவும், போக்குவரத்து அமைச்சராக இருந்த காமினி லெகுகே எரிசக்தி அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்கள் எனக்குறிப்பிடப்படுகின்றது.