கேரளாவில் தொடர்ந்து வரும் அ.தி.ர்.ச்.சி; அவதியுறும் பொ.து.ம.க்.க.ள்..!

image_pdfimage_print

கேரளாவில்….!

தற்போது இந்தியா- கேரளாவில் கொரோனா பாதிப்பு விகிதம் மீண்டும் வேகமாக அதிகரித்து வருகின்றமை பொதுமக்களிடையே பெரும் அ.தி.ர்.ச்.சி.யை உண்டாக்கியுள்ளது.

அங்கு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தொ.ற்.றா.ல் பாதிப்பு அதிகரித்துள்ளது.

இந்த நிலையில் தடுப்பூசி முகாம்கள் மூலம் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர மு.ய.ற்.சி.க.ள் இடம்பெற்று வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் கேரள மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கொரோனா முதல் அலையை முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசு மிகவும் திறம்பட கையாண்டது.

நாட்டிற்கே முன்மாதிரியாக ‘கேரளா மாடல்’ என்ற பெயரில் பல்வேறு திட்டங்களை வகுத்து செயல்படுத்திக் காட்டியது. ஆனால் நடப்பாண்டு பரவிய இரண்டாவது அலையில் நிலைமை கைமீறிப் போனது. நாட்டிலேயே அதிகபட்ச கொரோனா பாதிப்புகளை பதிவு செய்த மாநிலங்களின் பட்டியலில் இரண்டாவது இடத்திற்கு செல்லும் அளவிற்கு மோசமான பாதிப்பை கேரளா சந்தித்தது.

தற்போதும் தினசரி தொற்று எண்ணிக்கையில் நாட்டிலேயே அதிகபட்சமாக 18 ஆயிரத்திற்கும் மேல் பதிவாகி வரும் மாநிலமாக கேரளா உள்ளது. இதனால் அண்டை மாநிலங்கள் மிகவும் அச்சத்துடனேயே இருக்க வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் மற்றொரு அதிர்ச்சியூட்டும் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. நேற்றைய தினம் கேரளாவில் கொரோனா தொற்று விகிதம் 15 சதவீதத்தை தா.ண்.டி.யு.ள்.ள.து.

அதற்கு முந்தைய தினம் 14 சதவீதத்திற்கும் கீழ் இருந்த நிலையில், மீண்டும் அதிகரித்து 15.11 சதவீதத்தை அடைந்துள்ளது. எண்ணிக்கை அடிப்படையில் பார்க்கும் போது நேற்று 18,582 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 102 பேர் பலியாகி இருக்கின்றனர். புதிய பாதிப்புகளில் 141 பேர் வெளிமாநிலத்தில் இருந்து வந்தவர்கள். உள்மாநிலத்தில் பரவிய தொற்றால் 17,626 பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.