இலங்கை மக்களுக்கு இராணுவத் தளபதியின் விசேட அறிவிப்பு..!

இராணுவத் தளபதியின் முக்கிய செய்தி..

இலங்கையில் தற்போது கோவிட் தொற்றானது தீவிரமடைந்து வரும் நிலையில் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா நாட்டு மக்களுக்கு முக்கிய செய்தியொன்றை விடுத்துள்ளார்.

அதன்படி, எதிர்வரும் நாட்களில் முடிந்தவரை வீட்டுக்குள் இருக்குமாறு இராணுவத் தளபதி பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், பொது மக்கள் மிகவும் கவனமாக செயற்பட வேண்டும்.
தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம். இது மிகவும் கவனமாக இருக்க வேண்டிய நேரம்.
பணியிடங்களிலுள்ள ஊழியர்களின் எண்ணிக்கையை குறைப்பதற்காக, அத்தியாவசிய ஊழியர்களை வரவழைக்க மட்டுமே பொது நிறுவனங்களின் தலைவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.