குழி தோண்டும் போது கிடைத்த ஆபத்தான வெ.டி.ப்.பொ.ரு.ள்…!!

image_pdfimage_print

வெடிப்பொருள் மீட்பு…!

திருகோணமலை-கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆலங்கேணியில் தனியார் காணி ஒன்றில் ஆபத்தான கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக கிண்ணியா பொலிஸார் த.க.வ.ல் தெரிவித்துள்ளனர்.

குறித்த கைக்குண்டு நேற்று (16) மாலை மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வருகின்ற நவராத்திரியை முன்னிட்டு மேற்கொள்ளப்பட இருந்த தீ பள்ளயத்துக்கு குழி (தீ மிதிப்பு) ஒன்றை வெட்டும் போது அக்குழியிலிருந்து பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்பட்ட நிலையில் கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஒருவருக்குச் சொந்தமான (பத்ம நாதன் – செந்தில் குமரன்) பத்தரகாளியம்மன் கோயில் வளாகத்திலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணி உரிமையாளர் குண்டு கண்டு பிடிக்கப்பட்டதை அடுத்து பொஸாருக்கு அறிவித்துள்ளார். இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு வந்த கிண்ணியா பொலிஸார் கைக் குண்டை மீ.ட்.டு.ள்.ள.ன.ர்.

அத்துடன் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்ட குண்டு SFG – 87 ரக கைக்குண்டு என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் குண்டை செயலிழக்கச் செய்வதற்கான நீதிமன்ற அனுமதியை பெற்று குண்டை செயலிழக்கச் செய்ய செயலிழக்கும் வி.சே.ட பொலிஸ் அதிரடி படையின் உதவியை நாடியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.