தாயின் கவனக்குறையால் நடந்த விபரீதம்..!பரிதாபமாக பலியான பிஞ்சுகள்..!!

இந்தியாவில்…

தமிழகத்தில் புதுச்சேரியில் சர்க்கரைக்கு பதிலாக எலி மருந்து கலந்த பாலை குடித்து இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் பகுதியில் உள்ள சேத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் பால முருகன்(28). இவரது மனைவி பிரியா(26). இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் பிரியா சேத்தூர் கிராமத்தில் தனது இரண்டு குழந்தைகளுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பிரியா, குழந்தைகள் குடிக்க பாலை காய்ச்சியுள்ளார். அப்போது பாலில் நாட்டு சர்க்கரைக்கு பதிலாக எலி மருந்து கலந்த பாலை குழந்தைகளுக்கு கொடுத்துவிட்டு தானும் குடித்துள்ளார்.

உடனடியாக அன்றிரவு குழந்தைகள் மற்றும் பிரியா அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் அக்கம் பக்கத்தினர் மூவரையும் மீட்டு காரைக்கால் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

எனினும் சிகிச்சை பலனின்றி இரண்டு குழந்தைகளும் பரிதாபமாக உயிரிழந்த நிலையில் பிரியா மட்டும் உயிருக்கு போராடி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் முழுவதும் கவனக்குறைப்பாட்டால் நிகழ்ந்ததா? அல்லது திட்டமிட்டு செய்யப்பட்ட செயலா? என்ற கண்ணோட்டத்தில் பொலிஸார் தீவிர விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.