நாட்டில் திரிபடைந்த 03 வகை வைரஸ் கண்டுபிடிப்பு!

இலங்கையில் திரிபடைந்த 03 வகை வைரஸ் கண்டுபிடிப்பு!

நாட்டில் வேகமாகப் பரவிவருகின்ற டெல்டா வைரஸின் ஊடாகத் திரிபடைந்த மூன்று தொற்றுக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றியபோது தெரிவித்தார்.

அதனடிப்படையில் SA 222V, SA 701S மற்றும் SA 1078S ஆகிய மரபணுக்களின் மாற்றத்திற்கு உட்பட்ட டெல்டா வைரஸ் வகைகள் இலங்கையில் இனங்காணப்பட்டதாக அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.