மண்வெட்டியால் தாக்கி மகளை கொ.லை.செ.ய்.த தந்தை…!!

image_pdfimage_print

இளம் பெண் கொ.லை..

காலி-வாடுவெலிவிட்டிய பிரதேசத்தில் நபர் ஒருவர், தனது 33 வயது மகளை மண்வெட்டியால் தாக்கி கொ.லை செய்துள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தகவல் தெரிவித்துள்ளது.

குறித்த இந்தச் சம்பவத்தில் குறித்த பிரதேசத்தில் வசிக்கும் ரெஷானி கோன்கஹகே என்பவரே இவ்வாறு ப.டு.கொ.லை செய்யப்பட்டுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது.

மதுபோதையில் வீட்டுக்கு வந்துள்ள தந்தை, தனது மகளின் தலையில் மண்வெட்டியால் தாக்கியுள்ளார் என்றும், இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்த குறித்த பெண் பத்தேகம வைத்தியசாலைக்குக் கொண்டுச் செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் என்றும் நாகொட பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரிழந்த பெண்ணின் தந்தை தினமும் மதுபோதையில் வீட்டுக்கு வந்து வன்முறையில் ஈடுபடுவர் என்று பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரைப் பொலிஸார் கைதுசெய்துள்ள நிலையில் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.