வீட்டில் வெடி மருந்து தயாரித்த தம்பதியினருக்கு நேர்ந்த சோகம்…!!

image_pdfimage_print

வீட்டில் வெடி தயாரித்த தம்பதியினர்..

அம்பாறை – அளிக்கம்பை பிரதேசத்தில் வீட்டில் வெடி தயாரித்த நிலையில்,வெடி வெடித்து படுகாயமடைந்த நிலையில் தம்பதியினர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவமொன்று இன்று இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பன்றிக்கு வெடி வைக்க வீட்டில் வெடி தயாரித்த போது அவை வெடித்து காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சம்பவத்தில் அக்கரைப்பற்று, அளிக்கம்பை பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய குலன் மற்றும் அவரது மனைவியான 62 வயதுடைய வெங்கட்மேரி என்பவர்களே இவ்வாறு படுகாயமடைந்துள்ளனர்