வேரொரு பெண்ணுடன் சென்ற காதலன்…கட்டிய லுங்கியுடன் தாலி கட்ட வைத்த காதலி..!

image_pdfimage_print

தமிழகத்தில்….

தமிழகத்தில் காதலித்து ஏமாற்றி வேறொரு பெண்ணை திருமணம் செய்ய நினைத்த காதலனை, காதலி கட்டிய லுங்கியுடன் தாலி கட்ட வைத்த சம்பவத்தின் புகைப்படம் தற்போது இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த, சின்னாத்து குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த சுகுனா என்ற பெண்ணும், அரியலூர் மாவட்டம் பெரியாத்துகுறிச்சையை சேர்ந்த மணி்வேல் என்பவரும் பல ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் சென்னையில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்த போது தங்கள் காதலை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், கொரோனா பரவல் காரணமாக இவர்கள் இருவருக்கும் வேலை பறிபோனதால், தங்கள் சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து கொண்டதால், சுகுணா கர்ப்பம் ஆகியுள்ளார்.

இதனால் அவர் உடனடியாக தன்னை திருமணம் செய்து கொள்ளும் படி மணிவேலை வற்புறுத்தியுள்ளார். ஆனால், மணிவேலோ சொத்திற்கு ஆசைப்பட்டு, தன்னுடைய உறவுக்கார பெண்ணை திருமணம் செய்து கொள்ள முயன்று வந்துள்ளார்.

அதை அறிந்த சுகுணா உடனடியாக அங்கிருக்கும் விருத்தாச்சலம் காவல்நிலையத்தில், தன்னுடைய காதலனுடன் சேர்த்து வைக்கும் படி புகார் அளித்துள்ளார்.
புகாரின் பேரில், கட்டியிருந்த லுங்கியுடன் மணிவேலை பொலிசார் காவல்நிலையத்திற்கு அழைத்து வர, அப்போது பொலிசார் திருமண்ம செய்து கொள்ளவில்லை என்றால், நிச்சயம் சிறைக்கு தான் நீ செல்ல வேண்டும் என்று எச்சரித்துள்ளனர்.

இதன் பின்னர் மணிவேல் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ள, அங்கிருந்த அம்மன் கோவிலில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் அதிக அளவில் வைரலாகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.